கோவை: நாளை, பிரதமரின் 70 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, 70 கிலோ வடிவலான லட்டு கோவிலில் வைத்து அவர் பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி, பொதுமக்களுக்கு லட்டை பிரசாதமாக, பாஜகவினர் வழங்கினர்.
கோவை: நாளை, பிரதமரின் 70 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, 70 கிலோ வடிவலான லட்டு கோவிலில் வைத்து அவர் பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி, பொதுமக்களுக்கு லட்டை பிரசாதமாக, பாஜகவினர் வழங்கினர்.

செப்டம்பர் 17 நாளை பிரதமர் மோடி அவருடைய 70 வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.

இதனை முன்னிட்டு, கோவை திருச்சி சாலையில், அமைந்துள்ள ரெயின்போ காலனி பகுதியைச் சேர்ந்த பாஜகவினர், அவர் பல்லாண்டு வாழவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து செயல்படும் சிவன் காமட்சி அம்மன் திருக்கோவிலில் இறைவனை வேண்டி வேண்டுதல் வைத்தனர்.

மேலும், நாளை பிரதமரின் 70 வது பிறந்த நாள் என்பதால், 70 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட லட்டை கோவிலில் வைத்து வழிபட்டு செய்து, பின்னர் பொதுமக்களுக்கு பிரசாதமாக அளித்தனர்.