கோவை: தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள், பஞ்சாலைகள், சிறு, குறு தொழில்நிறுவனங்கள், கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், பைப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள், இந்தியா முழுவதும் விற்பனையாகின்றன. பம்புசெட் உற்பத்தியில் இந்தியாவிற்கே சிறந்த மார்க்கெட்டாக, கோவை உள்ளது.கோவை மாவட்டத்தில் மட்டும் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
ஊரடங்கு காலத்தில் மட்டும் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன், காரணமாக வங்கி கடன்கள், வட்டிகள் என திரும்ப செலுத்த முடியாத நிலையில் தொழில் நிறுவனங்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கடனை செலுத்தாத நிலுவை தொகைகளுக்கு வட்டிக்கு வட்டி போட்டு வங்கிகள் வசூல் செய்கின்றன, என தொழில் துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து, கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வங்கிகளில் தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கிய பல்வேறு கடன்களுக்கான வட்டிகளையும், அசலையும், கட்ட கால தவனை அளிக்கப்பட்டது. இதில், துவக்க காலத்தில் சரியான வழிக்காட்டுதல் இல்லாததாலும், வங்கிகளின் அலட்சியத்தாலும், கால அவகாசம் தவனை காலம் தொடர்பான விண்ணப்பிக்கும் முறை பலருக்கு தெரியாமல் போனது.
அப்போது, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பையும் மீறி வங்கிகள், இ.எம்.ஐ, கடன் உள்ளிட்டவற்றை வங்கி கணக்குகளில் இருந்து எடுத்துக்கொண்டன. அதன்பின், கால அவசாகம் அளிக்கப்பட்டது. தற்போது, கால அவசாகம் அளித்த நாட்களில் இ.எம்.ஐ, கடன்கள் உள்ளிட்டவை செலுத்தாதவர்களிடம் அதற்கான வட்டி, வட்டிக்கு வட்டி என கந்து வட்டியை விட மோசமாக வங்கிகள் வசூல் செய்கின்றன.
இது தொடர்பாக, மத்திய அரசு தாமாக முன் வந்து கொள்கை முடிவு எடுத்து ரிசர்வ் வங்கி மூலம் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர, அனைத்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் ரூ.1 லட்சம் கடன் அவசரமாக வழங்க வேண்டும். குறைந்தது அடுத்த 4 மாதங்களுக்காவது, வங்கி கடன்கள், வட்டிகள் உட்பட அனைத்தையும் ஒத்திவைக்க வேண்டும். இல்லை என்றால் பல ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடும் சூழ்நிலைக்கு தள்ளப்படும், இவ்வாறு அவர் கூறினார்.