மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில், கடந்த 7 மாதங்களாக காயத்துடன் சுற்றி வரும் யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை தீவிர முயற்சி

கோவை: கடந்த 7 மாதங்களாக காயத்துடன் சுற்றி வரும் 20 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க தீவிர முயற்சி எடுத்து வருவதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கடந்த 7 மாதங்களாக காயத்துடன் சுற்றி வரும் 20 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க தீவிர முயற்சி எடுத்து வருவதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் வனச்சரகம், சுண்டபட்டி பீட், நெல்லிதுறை காப்புக்காடு பகுதியில், கடந்த மார்ச் மாதம் 2020 மத்தியில், இடது முன்னங்கால் வீக்கமடைந்து, நடப்பதிற்கு சிரமம் உடன் இருந்த 20 வயது மதிக்கத்தக்க, ஆண் யானை வனப் பணியாளர்களால் கண்டறியப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் அடர்ந்த வனப்பகுதிக்குள் அந்த யானை நடமாடும் பகுதியில், தூரத்தில் இருந்தே யானையின் காலில் உள்ள காயம் பரிசோதிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப மாத்திரைகளை பொடி செய்து உணவு உருண்டைக்குள் வைத்தும், பழங்களுக்குள் வைக்கப்பட்டன. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், யானை நடமாட்டத்தினை கண்காணித்து வந்தனர்.



இந்நிலையில், யானையின் கால் ஏற்கனவே பாதிப்படைந்துள்ள நிலையில், தற்பொழுது யானையின் இடுப்பு மற்றும் வயிற்று பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு, மேலும் உடல் நலம் குன்றிய நிலையில் நெல்லிமலை வனப்பகுதியில் நடமாடி வருகிறது.

அந்த யானைக்கு உரிய சிகிச்சையை தக்க நேரத்தில் கொடுக்குமாறு, வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்த நிலையில், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் ரேஞ்சர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் யானையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனையடுத்து, மாவட்ட வனக் கால்நடை மருத்துவர், சுகுமார் தலைமையில் 5 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. காட்டு யானையை பார்வையிட்ட மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், காட்டு யானை இருக்கும் இடத்தில் மருத்துவம் பார்ப்பது இயலாத காரியம் என்றும் சமவெளி பகுதிக்கு வந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும், என்று மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளனர்.

இதையடுத்து, மாவட்ட உதவி வனப் பாதுகாவலர், தினேஷ் தலைமையிலான வனத்துறை குழு நெல்லித்துறை பகுதியில் இருக்கும் யானையை ட்ரோன் கேமிரா மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும், நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, சத்துக்கள் நிறைந்த உணவுகளை காட்டு யானைக்கு வைத்து வருகின்றனர்.



மேலும், சிகிச்சை போது எந்த விதமான அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க டாப்ஸ்லிப் மற்றும் சாடிவயலில் இருந்து இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு இருக்கிறது. காயம்பட்ட யானை, சமவெளி பகுதிக்கு வரும்பொழுது, உடனடியாக சிகிச்சை துவங்கும் விதத்தில் சிறப்பு மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...