மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று, செப்டம்பர் 15 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, வழக்கமாக நடைபெறும் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெறாமல், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3வது மாடியில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம், ஆறாயிரம் மருத்துவ இடங்களில் 500 இடங்கள் வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறுவோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும், என்பது குறிப்பிடத்தக்கது.