கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ திவான்‌ பகதூர்‌ சாலையில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.24.36 கோடி மதிப்பீட்டில்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணைய‌ர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ திவான்‌ பகதூர்‌ சாலையில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.24.36 கோடி மதிப்பீட்டில்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணைய‌ர் பெ.சுமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ திவான்‌ பகதூர்‌ சாலையில்‌ சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல்‌ கெளலிபிரவுன்‌ ரோடு வரை ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.24.36 கோடி மதிப்பீட்டில்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணைய‌ர் பெ.சுமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும், ஸ்மார்ட்‌ சிட்டி பணிகளான சாலை அமைக்கும்‌ பணிகள்‌, பாதாள சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌, மின்சார புதைவடம்‌, கேபிள்கள்‌, 24x7 குடிநீர்‌ குழாய்‌ பதிக்கும்‌ பணிகள்‌, தொலைதொடர்பு கேபிள் அமைத்தல்‌, மழைநீர் வடிகால்‌ அமைக்கும்‌ பணிகள்‌, இருபுறமும்‌ பாதசாரிகள் நடைபாதைகள்‌, அலங்கார தெருவிளக்குகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌, ஒளிரும்‌ விளம்பர பலகைகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌ ஆகிய பணிகளை பார்வையிட்டு, ஸ்மாட்‌ சிட்டி பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ ஏ.ஜே.செந்தில்‌ அரசன்‌, செயற்பொறியாளர்கள்‌ ஸ்மார்ட் சிட்டி திட்டம்‌ சரவணக்குமார்‌, உதவி செயற்பொறியாளர்‌ சுகந்தி, உதவி பொறியாளர்கள்‌ கமலக்கண்ணன்‌, சத்தியமூர்த்தி, குடிநீர்‌ பிரிவு இளம்பொறியாளார்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...