கோவை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து, ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீட் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருவதாகவும், இத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.

இதேபோல, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.