கோவையில் சுகாதாரத்துறை துணை இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி!

கோவை: சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜி. ரமேஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜி. ரமேஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வந்த சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் கடந்த சில நாட்களாகவே சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதனை அடுத்து நேற்று முன் தினம் இவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து இவரது அலுவலகம் முழுவதும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அதில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது அவர் வீட்டில் தனிமையில் இருந்து சிகிச்சை எடுத்து கொள்கிறார். தேவைப்படும் பட்சத்தில் மருத்துவமனை செல்வார்," என்றார்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...