கோவையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போனை சார்ஜில் போட்ட மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு!

கோவை: கோவையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போனை சார்ஜில் போட்ட மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போனை சார்ஜில் போட்ட மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சங்கனூர் சாலை காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவரது மகன் சந்துரு(16) பதினோரானம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி திறக்கப்படாத காரணத்தால் சந்துரு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று தன்னுடைய செல்போனை சார்ஜ் செய்ய முயன்ற போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு மூர்சை அடைந்தார். இதையடுத்து, மாணவனை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.

அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

பின்னர் இது குறித்து தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...