கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலக கொரோனா கட்டுப்பாட்டு அறையில்‌ மாநகராட்சி ஆணையர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலக கொரோனா கட்டுப்பாட்டு அறையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலக கொரோனா கட்டுப்பாட்டு அறையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரோனா வைரஸ்‌ தொற்று பரவுதலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம்‌ பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், அதன்‌ தொடர்ச்சியாக இன்று மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ கோவை மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு மண்டலம்‌ அலுவலகத்தில்‌ கொரோனா கட்டுப்பாட்டு அறையில்‌ மேற்கு மண்டலத்தில்‌ வார்டு வாரியாக அனைத்து பகுதிகளிலும்‌ சுகாதார பணியாளர்கள்‌ வீடுவீடாக சென்று சளி, காய்ச்சல்‌, இருமல்‌ ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு கொரோனா தொற்று பாதித்தவர்களின்‌ விபரங்களை கணினியில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டு வரும்‌ விபரங்களையும்‌, தொற்று பாதித்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படும் விபரங்களையும்‌ கணினியில்‌ பதிவேற்றம்‌ செய்யப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, அனைவரும்‌ முகக்கவசம்‌ கட்டாயம்‌ அணிய வேண்டும்‌, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்‌, களப்பணியில்‌ ஈடுபடுபவர்கள்‌ முகக்கவசம்‌, கையுறை அணிய வேண்டும்‌, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்‌, அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று இல்லாத மாநரகாட்சியாக திகழ அனைவரும்‌ ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ ஏ.ஜே.செந்தில்‌ அரசன்‌, செயற்பொறியாளர்கள்‌ சரவணக்குமார்‌, உதவி செயற்பொறியாளர்‌ சுகந்தி,

நிர்வாக அலுவலர்‌ உஷா, உதவி பொறியாளா்கள்‌ கமலக்கண்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...