திருப்பூர்: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூரிலிருந்து, கர்நாடக மாநிலம் தேவன்கொத்தி வரை விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்தும் சாலையோரமாக எண்ணெய் குழாய்களை அமைக்க வலியுறுத்தியும், திருப்பூரில் விவசாயிகள் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.இந்நிலையில், விவசாயிகளின் போராட்ட காலத்தை கருத்தில்கொண்டு, இத்திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும், என மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தொடர்ந்து, பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால், பாரத் பெட்ரோலிய நிறுவனம் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தின் துவக்க இடமான கண்டியன் கோவில் அருகே இன்று முதல் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஈரோடு சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் விவசாயிகள் இன்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, போராட்ட பகுதிகள் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.