பொள்ளாச்சி அருகே ரிசார்ட் உரிமையாளரை ஏமாற்றி ரூ.1,72,50,000 பணம் மோசடி செய்த வழக்கு: கேரளாவை சேர்ந்த 5 பேர் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ரிசார்ட் உரிமையாளரை ஏமாற்றி ரூ.1,72,50,000 பணம் மோசடி செய்த வழக்கில், கேரளா மோசடி கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ரிசார்ட் உரிமையாளரை ஏமாற்றி ரூ.1,72,50,000 பணம் மோசடி செய்த வழக்கில், கேரளா மோசடி கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்.

பொள்ளாச்சி அருகே கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரிசார்ட் உரிமையாளர் முத்து (67). இவர் செப்டம்பர் 2 ஆம் தேதி வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடியே 72 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் உள்ள மற்றொரு வங்கி லாக்கரில் வைப்பதற்காக, அவரிடம் நண்பராக பழகி வந்த அனுபுகுமார் என்பவரிடம் கொடுத்துள்ளார். 

ஆனால், அவர் வங்கி லாக்கரில் பணத்தை வைக்காமல் தலைமறைவு அகியுள்ளார். பணத்தை பறிக்கொடுத்த ரிசாட் உரிமையாளர் முத்து, ஆனைமலை காவல்நிலையத்தில் செப்டம்பர் 4 ஆம் தேதி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து தலைமறைவாகியுள்ள அனுபுக்குமார் மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு கேரள மாநில எல்லைப் பகுதியான செம்மனாம்பதி பகுதியில்  ஒரு தோட்டத்தில் இருந்த மோசடி கும்பலை சேர்ந்த மனோஜ், சிம்சன், சசிகாந்த், சதீஷ், பிலால் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். 

மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு நாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தி, 5 பேரையும் பொள்ளாச்சி கிளை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அனுப்குமாரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...