பொள்ளாச்சி பொங்காளியூர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொங்காளியூர் புதுகாலனி மதுரை வீரன் கோயில் அருகே வசிக்கும் பொதுமக்களுக்கு தெருவிளக்கு, சாலை தண்ணீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.



இந்நிலையில், ஆனைமலை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் யுவராஜ் தலைமையில் கோட்டூர் பேரூர் கழக செயலாளர் ரவிச்சந்திரன், முன்னிலையில் இன்று பொதுமக்கள் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுக்கப்பட்டது.

கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட பொங்காளியூர் புதுகாலனியில், 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் நத்தம் புறம்போக்கு பகுதியில் வசித்து வந்தனர். கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அரசு சார்பில் இந்த இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையில் பேரூராட்சி சார்பில் வீட்டு வரி ரசீது தரப்படவில்லை.



மேலும் தெருவிளக்கு, குடிநீர் குழாய், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இந்தமுறை பேரூராட்சி நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...