ஊராட்சி பணிகளில் வெளி நபர்கள் தலையிடுவதை கண்டித்து மாக்கினாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மூன்று பெண் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்

கோவை: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி ஊராட்சியில், வெளி நபர்கள் தலையிட்டு இடையூறு ஏற்படுத்துவதாகவும், இதை தடுத்து நிறுத்த கோரியும் இன்று 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 3 பெண் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி ஊராட்சியில், வெளி நபர்கள் தலையிட்டு இடையூறு ஏற்படுத்துவதாகவும், இதை தடுத்து நிறுத்த கோரியும் இன்று 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 3 பெண் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் ஈஸ்வரி (48), சோபியா (40), விஜயலட்சுமி (35) ஆகியோர் கூறியதாவது:

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் மாக்கினாம்பட்டி ஊராட்சியில் 3ம் வார்டு, 4ம் வார்டு மற்றும் 5 ம் வார்டுகளில் ஊராட்சிமன்ற உறுப்பினர்களாக, பெண் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். கடந்த 5 மாதங்களாக இந்த 3 வார்டுகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட எந்த ஊராட்சி பணிகள் குறித்து வார்டு உறுப்பினர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் தகவல் தெரிவிப்பது இல்லை.

தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள் மட்டுமே அவர்களது வார்டுகளில் ஊராட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும். ஊராட்சி பணிகளில் வேறு நபர்கள் தலையிடுவதை தடை செய்ய வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆலோசனைப்படி, இது குறித்து ஊராட்சிமன்ற கூட்டத்தில் முறையிட்டும் பலன் இல்லை.

மேலும், இந்திரா நகர் பகுதியில் சாக்கடை வசதி, குப்பை அகற்றுதல், கருப்பராயன் நகர் 5ம் வீதி பகுதியில் கடந்த 8 மாதங்களாக குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி ஆகியன செய்து தரப்படவில்லை. ஊராட்சி பணிகளில் வெளிநபர்கள் தலையீட்டை தடுக்க வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர்.



பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பின்னர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...