கோவையில் காட்டுபன்றி, மரநாய் போன்ற வனவிலங்குகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்க கோரி ஆட்சியரிடம் ஒற்றை காலில் நின்று விவசாயிகள் மனு!

கோவை: காட்டுபன்றி, மரநாய் போன்ற வனவிலங்குகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்க கோரி ஒற்றை காலில் நின்று விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: காட்டுபன்றி, மரநாய் போன்ற வனவிலங்குகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்க கோரி ஒற்றை காலில் நின்று விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஆனைமலை தாலுக்காவிற்குட்பட்ட அங்கலகுறிச்சி, சேத்துமடை, ஆழியாறு, மஞ்சநாயக்கனூர், கம்மாளப்பட்டி, கோலபருத்தியூர், கோட்டூர், செம்மனாம்பதி, மாரப்பகவுண்டன்புதூர், காளிபுரம், அம்பாரம்பாளையம், கிழவன்புதூர் ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு பணப்பயிர்களான தக்காளி, காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

தென்னை விவசாயத்தில் தேங்காய் ஆரம்ப நிலையான குரும்பகளை மரநாய்களும், மரப்பூனைகளும் சேதப்படுத்துவதால் தென்னை விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். பணப்பயிர்களை விவசாயம் செய்யும் விவசாயிகள் மயில்களாலும், காட்டு பன்றி தாக்குதலூலும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், காட்டுபன்றிகள் விவசாயிகளையும் தாக்குகின்றது. வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயம் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...