நிலத்தை ஏமாற்றிய நபர் மிரட்டல் விடுப்பதாக, தாய் மற்றும் மகள், கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

கோவை: கோவையில் 3 செண்ட் நிலத்தை மணல் ஆறுமுகச்சாமி என்ற நபர் ஏமாற்றி பெற்றதோடு, கொலை மிரட்டல்கள் விடுப்பதாக, தாய் மற்றும் மகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவையில் 3 செண்ட் நிலத்தை மணல் ஆறுமுகச்சாமி என்ற நபர் ஏமாற்றி பெற்றதோடு, கொலை மிரட்டல்கள் விடுப்பதாக, தாய் மற்றும் மகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை, நியூ சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த புனிதா என்பவர் தனது மகள் மகாலட்சுமி உடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் மனு இன்று அளித்தார். அதில், கடந்த 2004 ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள தங்களது பூர்விக சொத்தான 3 செண்ட் நிலத்தை, தனது மாமனார் தங்களுக்கு தெரியாமல் மணல் ஆறுமுகச்சாமிக்கு விற்பனை செய்து விட்டதாகவும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தங்களது தரப்பு வழக்கறிஞர் மணல் ஆறுமுகச்சாமிக்கு சாதகமாக செயல்பட்டு ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும், மணல் ஆறுமுகச்சாமியை சந்தித்து நியாயம் கேட்டதற்கு, எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும், மேல் முறையீடு செய்ய திட்டமிட்ட நிலையில், அவர் ரவுடிகள் மூலம் மிரட்டல் விடுத்தாகவும் கூறிய புனிதா, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து, மிரட்டல்கள் வருவதால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு மணல் ஆறுமுகச்சாமியே பொறுப்பு எனவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...