Coimbatore Superintendent of Police, Arularasu IPS has been tested positive for Covid.
கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட 490 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமீபத்தில் பொறுப்பேற்றார், அருளரசு. இவர், கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இவர் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.
இதில், இவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதும், இல்லாமல் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும், கோவை அரசு மருத்துவமனை ஆண் மருத்துவப் பணியாளர், பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பை சேர்ந்த இரு காவலர்கள், போத்தனூர் தலைமை காவலர் மற்றும் ராமநாதபுரம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, விளாங்குறிச்சி, பீளமேடு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், குனியமுத்தூர், சுந்தராபுரம், கணபதி மாநகர், காரமடை, சூலூர் உள்பட பகுதிகளை சேர்ந்த 490 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 74 வயது மூதாட்டி, 52 வயது ஆண், 40 வயது ஆண், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 63 வயது முதியவர் ஆகிய 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
இதன் மூலம், கோவை மாவட்டத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் என்ணிக்கை 353 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியர் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 554 பேர், இன்று குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில், இதுவரை 18 ஆயிரத்து 308 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது3 ஆயிரத்து 495 பேர் சிகிச்சையில் உள்ளனர்.