கோவை: கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டக்கூடாது என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:
கோவை மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500-க்கும் கீழே உள்ளது. மாவட்டத்தில் சுமார் தினமும் சுமார் 8 ஆயிரத்து 500 பேர் வரை சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 6 ஆயிரம் பேர் கோவை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள். இவ்வாறு பரிசோதனை அதிகரிப்பதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்தப்படுவதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏதேனும் சிறு அறிகுறிகள் வந்தாலும் அருகிலுள்ள அரசு அல்லது இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு உடனே சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்கள் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பரிசோதனை செய்துகொள்ளலாம். கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டக்கூடாது. இவ்வாறு கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.