மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயங்களுடன் கடந்த 7 மாதங்களாக சுற்றி வரும் யானைக்கு மருத்துவ குழு தீவிர சிகிச்சை

கோவை: மேட்டுப்பாளையம் வனச்சரகம், சுண்டபட்டி பீட், நெல்லிதுறை காப்புக்காடு பகுதியில், இடது முன்னங்கால் வீக்கமடைந்து, நடப்பதிற்கு சிரமம் உடன் இருந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை: மேட்டுப்பாளையம் வனச்சரகம், சுண்டபட்டி பீட், நெல்லிதுறை காப்புக்காடு பகுதியில், இடது முன்னங்கால் வீக்கமடைந்து, நடப்பதிற்கு சிரமம் உடன் இருந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த மார்ச் 24 ஆம் தேதி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று யானையின் காலில் உள்ள காயம் தூரத்தில் இருந்தே பரிசோதிக்கப்பட்டு மருத்துவரின் பரிந்துரைப்படி, மருந்து மாத்திரைகளை பொடி செய்து உணவு உருண்டைக்குள் வைத்தும், பழங்களுக்குள் வைத்தும் வனப்பகுதியில் அந்த யானை நடமாடும் பகுதியில் வைக்கப்பட்டன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் யானை நடமாட்டத்தினை கண்காணிக்கப்பட்டு வந்தது.



இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அடர்ந்த வனப்பகுதிக்குள் இருந்த யானை, செப்ட்ம்பர் 5 அன்று மதியத்திற்கு மேல், வனப்பகுதிக்கு வெளியிலுள்ள குன்னூர் ஆற்றங்கரைக்கு வந்து, ஆற்றங்கரை ஓரத்தில் இருந்த சேற்றில் சிக்கி, படுத்துவிட்டது. 

தகவல் அறிந்த உடன் வனக் கால்நடை மருத்துவர், சுகுமார் அவர்களுடன் சென்று, அந்த யானையை கண்காணித்து பின் சேற்றில் இருந்து எழுப்பப்பட்டு காட்டிற்குள் அனுப்பி வைத்தனர். அந்த யானையின் இடது முன்னங்காலின் கீழ்பாகம் வளைந்த நிலையில் லேசான வீக்கம் அடைந்திருப்பதை கண்டறிந்து, தொடர் சிகிச்சை அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டது .

இதை தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்,கோவை கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் இயக்குநர் ஓய்வு பெற்ற மனோகர், உதவி வன அலுவர் தினேஷ் குமார் ஆகியோர் யானை இருக்கும் நெல்லித்துறை வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். 

நோயின் தன்மையை கண்டறிய யானைக்கு மருந்து செலுத்து கட்டுக்குள் கொண்டுவந்து காயத்தினை ஆய்வு செய்ய வனக்கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்து செலுத்த, யானை கட்டுக்குள் கொண்டுவந்து சிகிச்சை அளிப்பதற்கு உரிய அனுமதி தலைமை வன உயிரினக் காப்பாளர், அவர்களிடமிருந்து பெறப்பட்டு வன கால்நடை மருத்துவர் டி சுகுமார் தலைமையில் 5 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், யானையை கட்டுக்குள் கொண்டு வர பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் மற்றும் சாடிவயல் பகுதியில் உள்ள இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...