கோவை: மேட்டுப்பாளையம் வனச்சரகம், சுண்டபட்டி பீட், நெல்லிதுறை காப்புக்காடு பகுதியில், இடது முன்னங்கால் வீக்கமடைந்து, நடப்பதிற்கு சிரமம் உடன் இருந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 24 ஆம் தேதி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று யானையின் காலில் உள்ள காயம் தூரத்தில் இருந்தே பரிசோதிக்கப்பட்டு மருத்துவரின் பரிந்துரைப்படி, மருந்து மாத்திரைகளை பொடி செய்து உணவு உருண்டைக்குள் வைத்தும், பழங்களுக்குள் வைத்தும் வனப்பகுதியில் அந்த யானை நடமாடும் பகுதியில் வைக்கப்பட்டன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் யானை நடமாட்டத்தினை கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அடர்ந்த வனப்பகுதிக்குள் இருந்த யானை, செப்ட்ம்பர் 5 அன்று மதியத்திற்கு மேல், வனப்பகுதிக்கு வெளியிலுள்ள குன்னூர் ஆற்றங்கரைக்கு வந்து, ஆற்றங்கரை ஓரத்தில் இருந்த சேற்றில் சிக்கி, படுத்துவிட்டது.
தகவல் அறிந்த உடன் வனக் கால்நடை மருத்துவர், சுகுமார் அவர்களுடன் சென்று, அந்த யானையை கண்காணித்து பின் சேற்றில் இருந்து எழுப்பப்பட்டு காட்டிற்குள் அனுப்பி வைத்தனர். அந்த யானையின் இடது முன்னங்காலின் கீழ்பாகம் வளைந்த நிலையில் லேசான வீக்கம் அடைந்திருப்பதை கண்டறிந்து, தொடர் சிகிச்சை அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டது .
இதை தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்,கோவை கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் இயக்குநர் ஓய்வு பெற்ற மனோகர், உதவி வன அலுவர் தினேஷ் குமார் ஆகியோர் யானை இருக்கும் நெல்லித்துறை வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
நோயின் தன்மையை கண்டறிய யானைக்கு மருந்து செலுத்து கட்டுக்குள் கொண்டுவந்து காயத்தினை ஆய்வு செய்ய வனக்கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்து செலுத்த, யானை கட்டுக்குள் கொண்டுவந்து சிகிச்சை அளிப்பதற்கு உரிய அனுமதி தலைமை வன உயிரினக் காப்பாளர், அவர்களிடமிருந்து பெறப்பட்டு வன கால்நடை மருத்துவர் டி சுகுமார் தலைமையில் 5 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், யானையை கட்டுக்குள் கொண்டு வர பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் மற்றும் சாடிவயல் பகுதியில் உள்ள இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.