கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 324 கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சையளித்து சாதனை!

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மகப்பேறு பிரிவில்‌ கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 324 கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மகப்பேறு பிரிவில்‌ கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 324 கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் 21 ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கோவை இ.எஸ்‌.ஐ மருத்துவமனை கடந்த மார்ச்‌ மாதம்‌ முதல் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதன்‌ காரணமாக மார்ச்‌ மாதம்‌ முதல்‌ கோவை, திருப்பூர்‌. நீலகிரி மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து கொரோனா தொற்று உள்ள கர்ப்பிணிப்‌ பெண்கள்‌ மற்றும்‌ மகளிர்‌ சம்பந்தமான நோய் உள்ள பெண்கள்‌ இங்கு தான்‌ அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால்‌ இம்மருத்துவமனையில்‌ கொரோனா தொற்று உள்ள கா்ப்பிணி பெண்களுக்கு பிரசவம்‌ பார்ப்பதற்கு ஏற்ற வகையில்‌ பிரத்யேகமாக பிரசவ வார்டும்‌, அறுவை சிகிக்சை அரங்கமும்‌ தயார்ப்படுத்தப்பட்டது.

இம்மருத்துவமனையில்‌ மகளிர்‌ மற்றும்‌ மகப்பேறு பிரிவில்‌ இதுவரை 409 மகப்பேறு மற்றும்‌ மகளிர்‌ நோய்‌ உள்ள கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில்‌ சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதேபோல, இம்மருத்துவமனையில்‌ 105 கர்ப்பிணிகளுக்கு சிறந்த முறையில்‌ பிரசவம்‌ பார்க்கப்பட்டது. 7 பெண்களுக்கு சுகப்பிரசவமும், 98 பெண்களுக்கு சிசேரியன்‌ முறையின்‌ மூலம்‌ பிரசவம்‌ பார்க்கப்பட்டது.

மேலும், இங்கு 76 தாய்மார்களுக்கு, வெளி மருத்துவமனையில்‌ பிரசவம்‌ பார்க்கப்பட்டு கொரோனா தொற்றின்‌ காரணமாக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில்‌ 31 தாய்மார்களுக்கு பேறுகால சிக்கலான பிரச்சனைகளும்‌ கொரோனா தொற்றின்‌ காரணமாக நுரையீரல்‌ பாதிப்புகளும் இருந்தது. அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள்‌ சிறந்த முறையில்‌ அளிக்கப்பட்டது. இதில்‌ 70 தாய்மார்கள்‌ சிகிச்சை முடிந்து நல்லமுறையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேபோல, இம்மருத்துவமனையில்‌ பிரசவம்‌ பார்க்கப்பட்டு பிறந்த அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும்‌ கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 4 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அனைத்து பச்சிளம்‌ குழந்தைகளுக்கும்‌ நல்ல முறையில்‌ சிகிச்சை அளிக்கப்பட்டு குணமானவுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்‌.

இது குறித்து மருத்துவமனை முதல்வர் நிர்மலா பேசுகையில், "இஎஸ்ஐ மருத்துவமனை மகப்பேறு பிரிவில்‌ 324 கொரோனா தொற்று உள்ள கர்ப்பிணி பெண்கள்‌ அனுமதிக்கப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில்‌ 197 கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை வியாதி, இரத்தகொதிப்பு, இரத்த சோகை, வலிப்பு வியாதி, இருதய நோய்‌ மற்றும்‌ முந்தைய அறுவை சிகிச்சை போன்ற சிக்கலான பிரச்சனைகளுடன்‌ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது," இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...