தமிழகத்தில் நாளை நடைபெறும் நீட் தேர்வை கண்டித்து தமுமுக, மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை: தமிழகத்தில் நாளை நடைபெறும் நீட் தேர்வை கண்டித்து கோவையில் தமுமுக, மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: தமிழகத்தில் நாளை நடைபெறும் நீட் தேர்வை கண்டித்து கோவையில் தமுமுக, மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக அரியலூர் மாணவி அனிதா, விக்னேஷ், திருச்சியை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, கோவை மாணவி சுபஸ்ரீ, திருப்பூர் ரித்திஸ்ரீ என மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்விற்கு எதிராக தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று மதுரை தல்லாகுளம் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வரும் உதவி ஆய்வாளரின் மகள் ஜோதி ஸ்ரீ உருக்கமான கடிதம் எழுதி வைத்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த மாணவி கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்விற்கு தயாராகி வந்தார். கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடந்த காரணத்தால் பாடங்கள் புரியவில்லை எனவும் தோல்வி அடைந்து விடுவோம் என அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் தெரிவித்திருந்தார்.



இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அப்போது, மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.



இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் உமர் கூறுகையில், நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து அது நடைமுறை படுத்தப்படவில்லை.

தற்போது ஆளும் தமிழக அரசு நடத்த மாட்டோம் என கூறியும் மத்திய அரசின் கட்டாயம் காரணமாக நாளை நீட் தேர்வுகள் நடைபெற உள்ளது. நீட் தேர்வு என்ற பெயரில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் நாளை தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...