கோவை: கோவை விமான நிலையத்திலுள்ள ஏர் கார்கோ வளாகத்தில் மீண்டும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

சமீபத்தில் 100 பயணிகள் ஏற்றப்பட்ட விமானத்தில் 7.2 டன் கார்கோ லோடு செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவையிலிருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தில் பயணிகள் 109 பேர் இருந்த நிலையில் 7.3 டன் கார்கோ லோடு செய்து அந்நிறுவனம் முன்பு செய்த சாதனையை அந்த நிறுவனமே தற்போது முறியடித்துள்ளது.
பொதுவாக பயணிகள் ஏற்றிச் செல்லும் விமானத்தில் அவர்களது உடைமைகள் வைத்தது போக, மிக சிறிய அளவு தான் கார்கோ வைப்பதற்கான இடம் இருக்கும்.
இதுவரை பயணிகள் விமானத்தில் அதிகபட்சமாக 3.5 முதல் 4 டன் எடை கொண்ட கார்கோ மட்டுமே லோடு செய்து வந்த நிலையில், தற்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சரியான திட்டமிடல் மற்றும் கையாளுதல் உள்ளிட்ட நடவடிக்கையால் அதிக எடை கொண்ட பயணிகள் பயணிக்கும் விமானத்தில் ஏற்ற முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.