கோவை: வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு வரும் குப்பைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வல்லுநர் குழு இன்னமும் வராததால் ‘பயோ மைனிங்' முறையில் குப்பைகளை அகற்றும் பணி துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக்கிடங்கு 650 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு மாநகராட்சி பகுதிகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் சுமார் 850 டன் முதல் 1000 டன் வரை குப்பைகள் கொட்டப்படுகிறது.
வெள்ளலூர் குப்பைக்கிடங்கை சுற்றி கோணவாய்க்கால்பாளையம், அன்புநகர், எல்.ஜி. நகர், ஸ்ரீராம் நகர், கஞ்சிகோணாம்பாளையம், சித்தன்னாபுரம், அற்புதம் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. வெள்ளலூர் பேரூராட்சி மற்றும் மலுமிச்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களும் அருகில் வசிக்கின்றனர்.
மேற்கண்ட பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சுமார் 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த குப்பை கிடங்கில் குவிக்கப்படும் குப்பைகள் காரணமாக, சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும்.
இந்நிலையில், வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை, ‘பயோ மைனிங்' முறையில் அகற்ற ரூ.60.16 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கான பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவங்கி வைத்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு டெண்டர் விடப்பட்டது.
இந்த திட்டம் துவங்குவதற்கு முன்னர் வெள்ளலூர் குப்பைகிடங்கிற்கு வரும் குப்பைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வல்லுநர் குழு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வல்லுநர் குழு வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு வரும் குப்பை அளவு, அதில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் அளவு போன்றவை குறித்து ஆய்வு செய்து பயோ மைனிங் முறைக்கு ஏற்றவாறு ஆய்வு அறிக்கை தயார் செய்வார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் பயோ மைனிங் இயந்திரங்கள் பொருத்தப்படும் என கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக வல்லுநர் குழு வருவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கில் தளர்வுகள் அளித்த பின்பும் வல்லுநர் குழு இன்னமும் வரவில்லை.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘வல்லுநர் குழு இன்னமும் வரவில்லை. அவர்கள் விரைவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் பயோ மைனிங் முறை விரைவில் செயல்பாட்டிற்கு வரும்,’’ என்று தெரிவித்தனர்.