மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார் - சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்

தமிழக பத்திரிகை உலகில் குறிப்பிடத்தக்க மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மூத்த உறுப்பினருமான சுதாங்கன் (63) உடல்நிலை குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, இன்று இயற்கை எய்தினார்.


தமிழக பத்திரிகை உலகில் குறிப்பிடத்தக்க மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மூத்த உறுப்பினருமான சுதாங்கன் (63) உடல்நிலை குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, இன்று இயற்கை எய்தினார்.

அவரின் மறைவு குறித்து, சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

திசைகள் இதழில் தன் எழுத்துப் பணியைத் தொடங்கியவர், பிறகு குமுதம் பத்திரிகையில் பகுதி நேர நிருபராகப் சேர்ந்தார். அங்கே, அப்போது இணையாசிரியராக இருந்தவர், ரா.கி.ரங்கராஜன். அதனால் இவர் பெயர் மாற்ற வேண்டிய சூழல். ரங்கராஜனான இவர் சுதாங்கன் ஆனார்.

1982 இறுதியில் விகடன் நிறுவனத்தில் புதிதாக துவங்க இருந்த ஜூனியர் விகடனின் முதல் நிருபராக சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கே பணி புரிந்தார் . பின், 1986ம் ஆண்டு கிராமப்புற ரிப்போர்ட்ங்கிற்காக கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் விருதை பெற்றார்.

1980 களில் நாடு முழுவதும் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது என மத்திய அமைச்சர் ஒருவர் அறிவித்தார். கொத்தடிமை முறை நடைமுறையில் உள்ளது என ஆதாரபூர்வமாக நிரூபித்ததுடன் நிற்காமல், தமிழக காவல்துறை உதவியுடன் ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக சிக்கி இருந்த தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்ட பெருமையும் சுதாங்கனுக்கு சேரும்.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது, அவரது சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் மக்கள் நல திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை, என கள நிலவரங்களை செய்தியாக்கியவர் சுதாங்கன்.

அன்றைய அமைச்சர்கள் மறுப்பு அறிக்கை வெளியிட்டபோது, தொகுதியில் நலப்பணிகள் நடக்கவில்லை, என்பதை வீடியோ ஆதாரங்களாக முதன்முதலில் வெளியிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட அன்றைய முதல்வர் எம் ஜி ஆர் தொகுதிக்கான நலப் பணிகளை செய்ய உத்தரவிட்டார், என்பது வரலாறு.

1992ம் வருடம். ஜூனியர் விகடனின்பொறுப்பாசிரியர் பொறுப்பில் இருந்து வெளியேறி, தினமணி நாளிதழில் பொறுப்பாசிரியராக சேர்ந்தார்.

நிர்வாகம் இரு குழுமங்களாக மாறிய நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் மும்பைக்காக தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை துவக்கி அதன் துவக்க ஆசிரியராக, ஆனார்.

1996ம் வருடத்திலிருந்து, தொடர்ந்து விஜய், ராஜ், ஜெயா தொலைக்காட்சிகளில் அரசியல் விமர்சகனாக பேட்டி எடுத்த அனுபவம் இவருக்கு உண்டு. தொடர்ந்து, 36 மணி நேரம் 19 தேர்தல் முடிவுகளை விஜய் டிவியில் கொடுத்த அனுபவம் இவருக்கு உண்டு.

நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு தொடர்கதை விகடனில் எழுதியவர். எம்.ஜி.ஆர். எம்.ஆர். ராதா கொலை முயற்சி வழக்கின் ஒரு பதிவாக தினமணி கதிரில், சுட்டாச்சு சுட்டாச்சு என்கிற பெயரில் 52 வாரங்கள் வந்த தொடர், பின்னர் புத்தகமாக வந்தது.

இவரது மறைவு பத்திரிக்கை துறைக்கு ஓர் பேரிழப்பு என்று சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...