கோவையில் நாளை 16 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது

கோவை: கோவை மாவட்டத்தில் நாளை 16 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை கோவையில் மட்டும் 10,627 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் நாளை 16 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை கோவையில் மட்டும் 10,627 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதுவதற்காக 16 மையங்கள் அமைக்பப்பட்டுள்ளன. இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.

நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அறையிலும் 12 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த தேர்வை கண்காணிக்க ஒரு தேர்வு அறைக்கு இரு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்னர். தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் காலை 11 மணிக்குள் தேர்வு எழுதும் மையத்திற்கு வர வேண்டும். பின்னர் 11.30 மணி அளவில் மையத்தின் உள்ளே ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப்படுவார்கள்.

அங்கு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். இதில் அதிக உடல் வெப்பநிலை கொண்ட மாணவர்கள் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மதியம் 1.30 மணிக்கு, ஒவ்வொரு மாணவர்களாக சமூக இடைவெளியை கடைபிடித்து அவர்கள் தேர்வு எழுதும் அறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அனைத்து மாணவ, மாணவிகளும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு மின்சார வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...