கோவை மாநகர் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கோவை: நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகள் கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


கோவை: நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகள் கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது.



கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவருக்கு அக்கட்சியினர் மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கோவையில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் சுகாதாரமான முறையில் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.



கோவை ரயில் நிலையத்தில் வாடகை ஆட்டோ, கார் மற்றும் வாகன நிறுத்தங்களில் முறையான அளவில் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் நினைவு தூண் அமைத்து ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்த அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்.

கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தனிப்படை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் சாக்கடை நீர் கலப்பதைத் தடுத்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அதனை முறைப்படுத்தி விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை விரைந்து முடித்து, அவற்றில் பாரதப் பிரதமரின் புகைப்படம் குறைக்கப்பட வேண்டும்.

உழவர் சந்தையில் உழவர் அல்லாதோர் விற்பனை செய்வதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உழவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

மாநகர பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள், அரசு கட்டிடங்கள் தார்சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் மக்கள் சேவை மையத்தின் நடமாடும் நூலகம் மற்றும் இ-சேவை மைய வாகனத்தை தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் துவக்கி வைத்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...