வால்பாறையில் சத்துணவு கூடத்தை இடித்து அரிசி, சத்துணவு பாத்திரங்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்!

கோவை: வால்பாறையில் காட்டு யானைகள் சத்துணவு கூடத்தை இடித்து அரிசி, பருப்பு மற்றும் சத்துணவு பாத்திரங்களை சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வால்பாறையில் காட்டு யானைகள் சத்துணவு கூடத்தை இடித்து அரிசி, பருப்பு மற்றும் சத்துணவு பாத்திரங்களை சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளி மிகவும் பழமைவாய்ந்த பள்ளி. இதனைச் சுற்றி களைகள் முளைத்து அடர்ந்த காடு போல் காணப்படுகிறது.



இந்நிலையில், அங்குள்ள பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தை நேற்று இரவு 2 மணியளவில் 16 காட்டு யானைகள் கொண்ட கும்பல் சத்துணவு வைப்பு அறையை உடைத்து அரிசி, பருப்பு மற்றும் சத்துணவு பாத்திரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

இதனிடையே, காலையில் அங்கு வந்த சத்துணவு ஊழியர்கள் உடனடியாக வனத்துறை மற்றும் எஸ்டேட் நிர்வாகத்திற்கும் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

மேலும் அப்பகுதியில் இருந்த காட்டு யானை கூட்டத்தை வனத் துறையினர் உடனடியாக நேரில் வந்து பார்த்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

தொடர்ந்து 16 காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...