திருப்பூர்: கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் நேரங்களை வீணடிக்காமல் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என ஆரம்பித்து, தற்போது அதன் மூலமே வருமானமும் ஈட்டி வருகிறார் திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி.
திருப்பூர்: கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் நேரங்களை வீணடிக்காமல் புதிதாக எதையாவது கற்று கொள்ள வேண்டும் என ஆரம்பித்து, தற்போது அதன் மூலமே வருமானமும் ஈட்டி வருகிறார் திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி. அவர் வித்தியாசமாக என்ன செய்ய கற்றுக்கொண்டார் ? எப்படி அதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார் என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
உலகில் கைவினைப் பொருட்களுக்கான தேடல் என்பது எப்பொழுதும் அதிகம். அதிலும், தேவையில்லாத பொருட்களில் இருந்து அழகழகான கைவினைப் பொருட்கள் செய்வது கலைஞர்களுக்கும் பிடித்தமான ஒன்று. முட்டை ஓடுகள் மீது உருவங்கள் வரைவது, பென்சிலின் நுனிப்பகுதியில் சிலை அமைப்பதை தொடர்ந்து தற்போது திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வீடுகளில் கழிவாக இருக்கும் தேங்காய் சிரட்டையில் இருந்து கைவினைப் பொருட்களை உருவாக்கி அசத்தி வருகிறார்.

நிப்டி என்ற கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி, ஊரடங்கு காலத்தில் வீணாக நேரத்தை கடக்காமல் இருக்க வீட்டில் இருந்த படியே இதனை செய்ய ஆரம்பித்துள்ளார். தான் நன்றாக பழகியதோடு மட்டுமல்லாமல் அதனை விற்று வருமானமாகவும் மாற்றி வருகிறார்.

திருப்பூர் ஆடை வடிவமைப்பு கல்லூரி மாணவி ஸ்வேதா வீடுகளில் கழிவுகளாக இருக்கும் தேங்காய் சிரட்டையில் விநாயகர் சிலை, கப்பல், பூச்செடி, ராட்சத எறும்பு, வாத்து, ஆட்டோ என தற்போது வரை 100க்கும் மேற்பட்ட கலைநயமிக்க பொருட்களை உருவாக்கி வருகிறார். பொருட்களின் வடிவமும் சரி, அதன் மீதான மேல்பூச்சும் சரி, இந்த கைவினைப் பொருள் தேங்காய் சிரட்டையில் செய்யப்பட்டது என்பதை மறக்கடித்து, அந்த பொருளின் கலைநயத்தை மட்டுமே பார்க்க தூண்டுகிறது.

இது தவிர பாட்டில்களின் மீதான கலைப்பொருட்களையும் தற்போது செய்ய ஆரம்பித்துள்ளார் இந்த மாணவி. தெரிந்தவர்கள் மூலம் செய்த பொருட்களை விற்பனை செய்வதால் பெற்றோர்களும் இதற்கு முழு ஊக்கம் கொடுப்பதாக சொல்கிறார். தற்போது தான் கற்றுக்கொள்ள துவங்கியுள்ளதால், சிறு சிறு பொருட்களை எப்படி தத்ரூபமாக செய்ய வேண்டும் என செய்து வருவதாகவும், வரும் காலத்தில் இந்த கலையை மற்றவர்களுக்கு எளிதில் சொல்லிக்கொடுப்பதோடு இதற்கென தனியாக ஒரு கடையை ஆரம்பிக்க வேண்டும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் இந்த மாணவி.