நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு..! திருப்பூரில் முதன்முறையாக தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

திருப்பூர்: நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில், இந்த வருடம் முதல் முறையாக திருப்பூரிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில், இந்த வருடம் முதல் முறையாக திருப்பூரிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதன்முறையாக திருப்பூரிலும் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த பள்ளியில் நீட் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 90 வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 24 நபர்கள் ஒரு அறைக்கு தேர்வு எழுதுவார்கள். ஆனால், கொரோனா காலம் என்பதால் ஒரு அறைக்கு 12 நபர்கள் என மொத்தம் 1,080 பேர் இந்த மையத்தில் தேர்வு எழுத உள்ளனர்.



திருப்பூரில் இயங்கும் மற்ற பள்ளி ஆசிரியர்கள் மேற்பார்வையாளராக வர உள்ளனர். ஒரு அறைக்கு 2 மேற்பார்வையளர்கள் என மொத்தம் 180 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை மதியம் 2 மணிக்கு ஆரம்பித்து 5 மணிக்கு முடிவடையும் தேர்வில் ஈரோடு, கோவை, கரூர் என பல மாவட்டங்களில் இருந்து மாணாக்கர்கள் வர உள்ளனர்.

அதேபோல, நாளை வர உள்ள மாணாக்கர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு இயல்பாக இருப்பதை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் 30 நிமிடம் கழித்து மீண்டும் பரிசோதிக்கப்படும் என்றும் அப்பவும் அதேபோல, இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேர்வு எழுத தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மேற்பார்வையாளராக இருக்கும் நபர்களுக்கு முழுகவச உடை கொடுக்கப்படும். மேலும், மற்ற அனைத்து நபர்களுக்கு மாஸ்க் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...