கோவை: கோவையில் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டம் 100 சதவீதம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மாவட்ட கருவூல அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசுத்துறைகளில் காகித பயன்பாடுகளை குறைக்கும் வகையில் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டம் அதாவது ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ் எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி அரசு ஊழியர்களின் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணி எளிமைப்படுத்தப்பட்டு உள்ளதோடு, சம்பளம் பெற்றுத்தரும் அதிகாரிகளின் பணிச்சுமை வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் கோவையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் 100 சதவீதம் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தப்பட வில்லை. இதனையடுத்து, பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி இந்த மாதம் 100 சதவீதம் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டம் முழுவதும் நடைமுறைக்கு வந்தபோதிலும் சர்வரின் வேகம் மிக குறைவாக உள்ளது. ஒரே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கருவூலக ஊழியர்கள் இதனை பயன்படுத்துவதால் இணைய வேகம் குறைவாக உள்ளது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பள பட்டியல் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அவதி அடைந்துள்ளனர். மாலை நேரத்தில் சர்வர் எவ்வித பிரச்சினையும் இன்றி இயங்குவதால் சம்பளப் பட்டியல் தயாரிக்கும் பணியில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஊழியர்கள் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கருவூல அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் இந்த மாதம் முதல் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் பதவி மூப்பு, ஓய்வு பெறும் தேதி, சம்பளப் பட்டியல் விவரம் உள்ளிட்டவற்றை துல்லியமாக தயார் செய்ய முடியும்.
மேலும், தற்போது உள்ள நடைமுறையின் படி அரசு ஊழியர்களின் சம்பளப் பட்டியலை 25ம் தேதிக்குள் கொடுத்தால்தான் வங்கிகள் அவர்களுக்கு 30ம் தேதி சம்பளம் வழங்கும். ஆனால், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையால் 30ம் தேதி காலையில் கொடுத்தால்கூட மதியம் அவர்களுக்கு சம்பளம் வழங்க முடியும், என்று தெரிவித்தனர்.