கோவையில் அலைபேசியை அதிகம் பயன்படுத்துவதாக பெற்றோர் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவி சானி பவுடர் குடித்து தற்கொலை.

கோவையில் அலைபேசியை அதிகம் பயன்படுத்துவதாக பெற்றோர் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவி சானி பவுடர் குடித்து தற்கொலை.


கோவை: கோவையில் அலைபேசியை அதிகம் பயன்படுத்துவதாக பெற்றோர் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவி சானி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அன்னூர் வடக்கலூர் பகுதியை சேர்ந்தவர் குமார். (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவரது மகள் ராகினி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அன்னூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில், அலைபேசியில் இவர் அதிக நேரத்தை செலவழித்ததால் மாணவியின் தந்தை அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், விரத்தியடைந்த பள்ளி மாணவி நேற்று மாலை சானி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

வீட்டில், மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை கண்ட அவரின் பெற்றோர் சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில்,சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அலைபேசியை பயன்படுத்துவதை பெற்றோர்கள் கண்டித்ததால், மனமுடைந்து மாணவி சானி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...