கோவை சாலையோர வியாபாரிகளிடம் கலந்துரையாடிய வானதி சீனிவாசன்..! மத்திய அரசின் திட்டங்களை குறித்து குறைகள் இருப்பின் பாஜக நிர்வாகிகளிடம் தெரிவிக்க அறிவுரை

கோவை சாலையோர வியாபாரிகளிடம் கலந்துரையாடிய வானதி சீனிவாசன்..! மத்திய அரசின் திட்டங்களை குறித்து குறைகள் இருப்பின் பாஜக நிர்வாகிகளிடம் தெரிவிக்க அறிவுரை.


கோவை: மத்திய அரசின் சுயசார்பு பாரத் திட்டம் குறித்து பா.ஜ.க வின் மாநில துணை தலைவர், வானதி சீனிவாசன், கோவையில் உள்ள சாலையோர வியாபாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.



மத்திய அரசின் சுயசார்பு பாரத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்று பயன் அடைந்து உள்ளனர்.

கோவையிலும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்றுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன், இந்த திட்டத்தினை பற்றி எடுத்துரைத்து அவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பத்தை அளித்தார். அப்பகுதியில், உள்ள 200க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தனர்.



அப்போது பேசிய, வானதி சீனிவாசன், சாலையோர வியாபாரிகளில் கடனுதவி வேண்டுமென்போர், இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம் என்றும், இது குறித்து சாலையோர வியாபாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.



தொடர்ந்து, பேசிய அவர், ஏதாவது, குறைகள் இருப்பின் மக்கள் அதை பாஜக நிர்வாகிகளிடம் கூறினால், அதை விரைந்து முடித்து தர பாஜக அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...