பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு, பொதுமக்கள் பாராட்டு.

பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு, பொதுமக்கள் பாராட்டு.

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு, பொதுமக்கள் பாராட்டு.



பொள்ளாச்சி, ஆரோக்கியநாதர் வீதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் ரோந்து சென்ற மேற்கு காவல் நிலைய போலீசார், அந்தப் பெண்ணிடம் விசாரித்த போது, அவர் வைத்திருந்த பையில் வங்கி பாஸ்புக், ரூபாய் 10,000, ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை இருந்துள்ளது.

மேலும், விசாரணையில் அவர் வெள்ளகோவில், மூத்தூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி சாந்தி என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த பெண்ணின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாயுடன், தனி வாகனம் மூலம் உறவினர்களுடன் சொந்த ஊரான வெள்ளகோவிலுக்கு பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார், பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைத்த, மேற்கு காவல் நிலைய போலீசாரை, பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...