கோவை மாநகராட்சியில் உணவகங்கள்‌ உட்பட அனைத்து கடைகளும்‌ தினமும் மூன்று முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் - மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவையில் கொரோனா நோய்‌ பரவலை தடுக்க உணவகங்கள்‌ உட்பட அனைத்து கடைகளும்‌ தினந்தோறும்‌ மூன்று முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோவையில் கொரோனா நோய்‌ பரவலை தடுக்க உணவகங்கள்‌ உட்பட அனைத்து கடைகளும்‌ தினமும் மூன்று முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை மாநகராட்சியில்‌ கொரோனா நோய்‌ பரவாமல்‌ தடுக்கும்‌ பொருட்டு கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகள்‌, வணிக வளாகங்கள்‌, தனியார்‌ நிறுவனங்கள்‌, உணவகங்கள்‌, பேக்கரி, சலூன்‌ கடைகள்‌, மருந்து கடைகள்‌ உட்பட அனைத்து கடைகளும்‌ தினந்தோறும்‌ மூன்று முறை கிருமிநாசினி தெளித்து தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்‌ எனவும்‌, பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்‌ எனவும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து தனியார்‌ மருத்துவமனைகள்‌, மருத்துவ ஆய்வகங்கள்‌, கிளீனிக்குகள்‌, ஸ்கேன்‌ சென்டர்‌ ஆகிய இடங்களிலும்‌ தினசரி மூன்று முறை கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல, கொரோனா அறிகுறி உள்ள அனைத்து நோயாளிகளும்‌ பல்ஸ்‌ ஆக்ஸி மீட்டர் மூலம்‌ பரிசோதனை செய்யவும்‌, ஆக்சிஜன்‌ அளவு 95% குறைவான நோயாளிகள்‌ உடனடியாக மருத்துவமனையில்‌ அனுமதிக்கவும்‌ மற்றும்‌ அதுசம்மந்தமான விவரங்களை மாநகராட்சியின்‌ கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கவும்‌ மாநகராட்சியின்‌ சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், கொரோனா தொற்று தொடா்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட எண்களுக்கு தொடா்பு கொள்ளவும்‌ 1077, 0422-2302323, 9750554321.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...