கோவை: கோவை மாவட்டத்தில் 10 இலக்க அடையாள எண்ணுடன் கூடிய புதிய வாக்காளர்கள் அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சீரியல் வரிசைகளை கொண்ட வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதன்படி மூன்று ஆங்கில எழுத்துக்களும், 7 இலக்க எண்களும் கொண்ட வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை விநியோகம் செய்யும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் திருத்தப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி கோவை மாவட்டத்தில் தற்போது 29 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இதனிடையே, இந்திய தேர்தல் ஆணையம் ஒரே மாதிரியான சீரியல் வரிசை கொண்ட வாக்காளர் அடையாள அட்டைகளை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.
இந்த புதிய அறிவிப்பின் படி கோவை மாவட்டத்தில் 6.45 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டை அச்சடிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன் கோவை வந்தது. ஆனால், கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் வாக்காளர் அடையாள அட்டைகளை விநியோகம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்தப் புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை விநியோகம் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர் தினமும் 50 அடையாள அட்டைகளை விநியோகம் செய்ய அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.