திருமணமாகி மூன்று நாட்களில், மனைவியை பிரிந்த சோகத்தில் கணவன் தற்கொலை. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கோவையில் திருமணமாகி மூன்று நாட்களில், மனைவியை பிரிந்த சோகத்தில் கணவன் தற்கொலை. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
பேரூர் அடுத்த சென்னனூரை சேர்ந்த கோவிந்தராஜ் (28). சொந்தமாக வெல்டிங் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இதே பகுதியை சேர்ந்த இளங்கலை மூன்றாமாண்டு படித்து வரும் மஞ்சுளா (20) வை கோவிந்தராஜ் கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி பெற்றோரை எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
மூன்று நாட்களாக இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த 7ம் தேதி மஞ்சுளாவின் பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் கோவிந்தராஜ் மற்றும் மஞ்சுளாவை அழைத்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அப்போது மஞ்சுளாவின் பெற்றோர் சமாதான பேச்சுவார்த்த நடத்தியதில், கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, என காவல் துறையிடம் எழுதி கொடுத்துவிட்டு மஞ்சுளா பெற்றோருடன் சென்றுள்ளார்.
இதனையடுத்து காதலித்து திருமணம் செய்த மனைவி பெற்றோருடன் சமாதானம் ஆகி சென்றதால், மனைவியை பிரிந்த சோகத்தில் இருந்த கோவிந்தராஜை அவரின் வீட்டிற்கு வந்த மஞ்சுளாவின் பெற்றோர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. காதலித்த மனைவி பிரிந்த சோகத்தில் இருந்த கோவிந்தராஜ், நேற்று அதிகாலை தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கோவிந்தராஜின் தற்கொலைக்கு காரணமான மஞ்சுளாவின் பெற்றோர்கள் காவல் துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அதுவரை கோவிந்தராஜின் உடலை வாங்க மாட்டோம் என கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புசாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தன்னுடைய மகனின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கோவிந்தராஜனின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.