பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், நிலக்கடலை சாகுபடிக்காக விவசாயிகள் காளை மாடுகளை கொண்டு உழவு ஓட்டும் பணி தீவிரம்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், நிலக்கடலை சாகுபடிக்காக விவசாயிகள் காளை மாடுகளை கொண்டு உழவு ஓட்டும் பணி தீவிரம்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னைக்கு அடுத்தபடியாக, நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரி சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. இதில் கடந்த மாதம், பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம், ஆனைமலை, அங்கலக்குறிச்சி, நா.மு.சுங்கம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலக்கடலைகளை விவசாயிகள் அறுவடை செய்தனர்.

இதைதொடர்ந்து, கடந்த மூன்று தினங்களாக பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மீண்டும் நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரி சாகுபடி செய்வதற்காக காளை மாடுகளை கொண்டு நிலத்தில் உழவு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் பலர் நிலக்கடலை சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். காட்டு பன்றிகள் தொல்லையாலும், மழை உரிய நேரத்தில் பெய்யாததாலும், கடந்தமுறை நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டு, நஷ்டம் ஏற்பட்டது.
தற்போது, அறுவடை முடிந்து சில தினங்களாக ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில், மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால், தற்போது உளவு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதைதொடர்ந்து, நடவு பணிகளும் நடக்க உள்ளது. இந்த முறை மழை பெய்து வருவதால் நிலக்கடலை உற்பத்தி அதிகரிக்கும் என நம்பிக்கையில் உள்ளோம், என்றனர்.