கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மற்றும் தொழில்துறை அரசு முதன்மை செயலாளர் முருகானந்தம் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
<

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தொற்று உள்ளவர்களை மற்றும் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமம் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு மையத்தை கண்காணிப்பு அலுவலர் மற்றும் தொழில்துறை அரசு முதன்மை செயலாளர் முருகானந்தம் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை அளிக்கப்படும் முறைகளையும், அம்மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து ரத்தினபுரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களை கொண்டு தினமும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறதா எனவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருப்பவர்களுக்கு தேவையான காய்கனி, பால் மற்றும் மளிகை பொருட்கள் கிடைப்பதற்கு தொடர்புடைய அலுவலா்கள் ஏற்படுத்தி தருகின்றனாகளா எனவும் கேட்டறிந்தார்.

பின்னர் கிழக்கு மண்டலத்தில் குறைவான கொரோனா தொற்று உள்ளவர்களுக்காக சிகிச்சை அளிப்பதற்காக கொடீசியாவில் அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 கேர் சென்டரை பார்வையிட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் முருகானந்தம் இ.ஆ,.ப., அவர்கள் அம்மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுகாதார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்வசதி மற்றும் சிகிச்சையளிக்கப்படும் முறைகள் குறித்தும், பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுகின்றனரா எனவும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் மருத்துவர்கள் சுகாதார அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி, மண்டல உதவி ஆணையா் மகேஷ்கனகராஜ் (மத்தியம்), முருகன் (கிழக்கு) நகர்நல அலுவலர் ராஜா, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ரமேஷ்குமார், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.