கோவை: கொரோனா நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பிசியோ அரைஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு பிசியோதெரபி மருத்துவ வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பிசியோதெரபி மருத்துவர்களை அங்கீகரிக்கவும் அவர்களை ஊக்கபடுத்தவும் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மிக எளிமையான முறையில் கோவை தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த பிசியோதெரபி மருத்துவ சேவை வழங்கிய டாக்டர். மதன கோபால் அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த கோவை மாவட்ட மாற்று திறனாளிகள் நல அதிகாரி சந்திர சேகர் அவர்களுக்கும் டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நினைவு விருது வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, பிசியோதெரபி மருத்துவ மாணவர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த கோவை பி.எஸ்.ஜி பிசியோதெரபி கல்லூரி முதல்வர் டாக்டர். மகேஷ் அவர்களுக்கு சிறந்த பிசியோதெரபி மாணவ ஊக்குவிப்பாளர் விருதும் டாக்டர். புவனேஷ் குமார், டாக்டர். சுரேஷ், டாக்டர். மஞ்சுளா அவர்களுக்கு முறையே சிறந்த பிசியோதெரபி மருத்துவர், இளம் சாதனையாளர், சிறந்த பங்களிப்பாளர் விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் கோவை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குனர் டாக்டர். சுதாகர் மற்றும் ப்லோ லிங் சிஸ்டம்ஸ் டாக்டர். குரு செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் பேசிய கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர்.ராஜா செல்வகுமார், இந்த ஆண்டு உலக பிசியோதெரபி தினம் கொரோனா நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பிசியோதெரபி மருத்துவ முறையை மையமாக கொண்டு அனுசரிக்கப்படுகிறது. பிசியோதெரபி மருத்துவத்தின் மூலம் கொரோனா வராமல் பாதுகாத்துக் கொள்ள நுரையீரலை தூய்மையான வைத்து கொள்ளும் மூச்சுப் பயிற்சி முறைகள் உள்ளன.
அதேபோல், கொரோனா நோயாளிகளுக்கு நுரையீரலிலுள்ள சளியை நீக்கி இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சீராக வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் அவசர சிகிச்சை பிரிவிலுள்ள நோயாளிகளை கூட குணப்படுத்த வாய்ப்பாக அமைகிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனாவிலிருந்து குணப்படுத்த நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல், உடல் சோர்வு, உடல் வலி, தசை தளர்வு, மூட்டு வீக்கம் போன்ற உடல் நல குறைவுகள் ஏற்படுகிறது. இவற்றை குணப்படுத்தவும் நுரையீரலை வலிமை படுத்தவும் பிசியோதெரபி மருத்துவம் உதவுகிறது என்றார்.
இதனை தொடர்ந்து, டாக்டர்.ராஜேஸ் கண்ணா பேசுகையில், டெல்லி, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா நோயாளியிலிருந்து மீண்ட நோயாளிகளுக்கு ஏற்படும் உடல்நல குறைபாடுகளை குணப்படுத்த கொரோனா மறுவாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டு, அதில் பிசியோதெரபி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதனை வலியுறுத்தி எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் குறைந்தபட்சம் ஒரு பிசியோதெரபி மருத்துவரை நியமிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா குறைக்க முடியும்.
அதேபோல ஏற்கனவே தொகுப்பு ஊதிய அடிப்படையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட்ட பிசியோதெரபி மருத்துவர்கள் நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பிசியோதெரபி சிகிச்சை முறைகளை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் மருத்துவ தரவுகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதற்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.