கோவை மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது..! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருது வழங்கி கவுரவித்தார்!

கோவை: கோவையில் ரூ.2.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கான பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.



கோவை: கோவையில் ரூ.2.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கான பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.



கோவை மதுக்கரை பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோயெதிர்ப்பு மாத்திரைகள் அடங்கிய தொகுப்பை பொது மக்களுக்கு வழங்கிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி நிகழ்ச்சியில் பேசுகையில், சளி, காய்ச்சல் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கோவை மாநகராட்சி மூலமாக மருத்துவ முகாம்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

அதேபோல, வெளி மாவட்டம் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமே வைரஸ் தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், கோவையில் இரண்டு வாரங்களில் வைரஸ் தொற்று குறையும் என நம்பிக்கை தெரிவித்தார். தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 9000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த அமைச்சர், கொரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையும் சத்தான உணவும் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.



இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12 புதிய ஆம்புலன்ஸை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார்.



விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுடன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு 10,000 ரூபாய் வழங்கி கவுரவித்தார்.

மேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் புதிய பாடத்திட்டத்திற்கான பாடநூலில் இணையதளங்கள் பதிவேற்றம் செய்யும் பணியில் சிறப்பாக பணியாற்றிய கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் 2 ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.



மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் பின்வருமாறு :

சொர்ண மணி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதிய மகாலிங்கபுரம், பொள்ளாச்சி

தனசேகரன், முது கலை ஆசிரியர், சீரநாயக்கன்பாளையம்

சந்திரசேகரன், ஓவிய ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, குரும்பபாளையம்

செல்வராணி, தலைமை ஆசிரியர், அவினாசிலிங்கம் மேல்நிலைப்பள்ளி

ரேவதி, தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளமடை

முரளிதரன், தலைமையாசிரியர், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா, பெரியநாயக்கன்பாளையம்

ராஜா, முதல்வர், ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம்

ஷோபனா, பாரதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செட்டிபாளையம்

பிரபு ராஜா, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இளுவ தியா சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாநில அரசு அறிவித்ததுள்ள நிலையில், இளுவ தியா சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு சாதி சான்றிதழ்களையும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார்.

பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்திலும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டார். இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் சுமித் சரண், கோவை மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...