தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ் 25 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கினார். 2019 முதல் இதுவரை ரூ.17.26 கோடி மானியம் 165 தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வணிக காப்பகம் மூலம் மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் Rashtriya Krishi Vikas Yojana - Remunerative Approaches for Agriculture and Allied sectors Rejuvenation -Regional Agribusiness Incubators (RKVY-RAFTAAR-R-ABI) திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முனைவோர்களுக்கு மானியம் வழங்கும் விழா நடைபெற்றது.

08.07.2026 அன்று நடைபெற்ற இவ்விழாவில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மொத்தம் ரூ.83.20 லட்சம் மானியத்தை 25 தொழில் முனைவோர்களுக்கு வழங்கினார். இதில் வேளாண் துளிர் நிறுவனங்களுக்கான SAIP Cohort VI-ன் கீழ் 11 மானியதாரர்களுக்கு ரூ.45.40 லட்சமும், புதிய வேளாண் தொழில் முனைவோர்களுக்கான AOP Cohort VI-ன் கீழ் 10 மானியதாரர்களுக்கு ரூ.30.00 லட்சமும், மாணவர் தொழில் முனைவோர் வழிகாட்டுதல் திட்டமான SOP Cohort-VI-ன் கீழ் 4 மானியதாரர்களுக்கு ரூ.7.80 லட்சமும் வழங்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த RKVY-RAFTAAR-R-ABI திட்டம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக இயக்குனரகம் மற்றும் தொழில்நுட்ப வணிக காப்பகத்தில் 2019-ல் முதல் செயல்படத் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகள் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வேளாண் தொழில் முனைவோர்களுக்கு (AOP) ரூ.5 லட்சம் வரையிலும், வேளாண் துளிர் நிறுவனங்களுக்கு (SAIP) ரூ.25 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது.

2019 முதல் இதுவரை மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் மூலம் 165 தொழில் முனைவோர்களுக்கு மொத்தம் ரூ.17.26 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் உரையாற்றிய துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன், இளம் பட்டதாரிகளை வேளாண்மை சார்ந்த தொழிலில் ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். நிலையான மற்றும் இலாபகரமான விவசாய வணிகத்திற்காக புதிய தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்தவும் செயல்படுத்தவும், விவசாயம் சார்ந்த தொழில் முனைவோர்களை வழிகாட்டுவதன் அவசியம் குறித்தும் அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் Dr.E.சோமசுந்தரம், இயக்குநர், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரகம் வரவேற்புரை ஆற்றினார். A.V.ஞானசம்பந்தம், செயல் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, தொழில்நுட்ப வணிக காப்பகம் நன்றியுரை வழங்கினார். பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற தொழில் முனைவோர்கள் தங்கள் மானியத்தை வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதற்காகவும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்காகவும் பயன்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...