கோவை: ஈரோட்டிலிருந்து ஜவுளி பார்சல்களை ஏற்றி சென்ற லாரியில் ஜவுளி பண்டல்களை சினிமா பாணியில் திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: ஈரோட்டிலிருந்து ஜவுளி பார்சல்களை ஏற்றி சென்ற லாரியில் ஜவுளி பண்டல்களை சினிமா பாணியில் திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவுக்கு ஜவுளிகளை பார்சல் ஏற்றி கொண்டு வந்த TN-41 AU 8290 என்ற எண் கொண்ட லாரியை நாகர்கோவிலை சேர்ந்த லாரி ஓட்டுனர் ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட்டில் இருந்து கருமத்தம்பட்டி டோல்கேட் அருகே வந்தபோது, ஓட்டுனர் ரவிக்குமார் வாகனத்தை சோதைனை செய்த போது கயிறுகள் அவிழ்ந்து உள்ளதை கண்டவர் லாரியின் மேல் ஏறி பார்த்த போது 130 பண்டல்களுடன் ஏற்றி வரப்பட்ட லாரியில் தார்ப்பாயை கிழித்து உள்ளிருந்த 50,000 ரூபாய் மதிப்பிலான 4 துணி பண்டல்கள் கிழித்து எடுத்துச் செல்லப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

துணி பண்டல்களை திருடர்கள் சினிமா பட பாணியில் வாகனத்தில் பின்புறமாக வந்து, ஓடும் லாரியில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த லாரியில் உள்ள துணிகள் அனைத்தும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட இருந்தது.
இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பொழுது முதலில் புகாரை ஏற்க மறுத்தவர்கள் அவினாசி காவல்நிலையத்தில் புகாரளிக்க அறிவுறுத்தியுள்ளனர். இதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் புகார் பெறப்பட்டு புகார் மனு ரசீதும் ஓட்டுனருக்கு கருமத்தம்பட்டி காவலர்கள் வழங்கியுள்ளனர்.
ஓடும் லாரியில் சினிமா பாணியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது ஓட்டுனர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.