கேரள தங்க கடத்தல் விவகாரம்: கோவையில் தங்க நகை பட்டறையில் என்‌ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை.

கேரள தங்க கடத்தல் விவகாரம்: கோவையில் தங்க நகை பட்டறையில் என்‌ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை.


கோவை: ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சம்பவம் தொடர்பாக, கோவை கருப்ப கவுண்டர் வீதி அருகில் உள்ள நகை பட்டறை உரிமையாளருக்கு ஏதேனும், தொடர்புள்ளதா? என்றசந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரது வீடு மற்றும் நகை பட்டறையில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது குறித்து, சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடத்தலுக்கு பின்னணியாக, தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய, ஸ்வப்னா சுரே‌‌ஷ் என்பவர் செயல்பட்டது, விசாரணையில் வெளிவந்தது. இதனையடுத்து, அவர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இதுவரை, ரூ.100 கோடி தங்கம் கடத்தப்பட்டு இருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், என்.ஐ.ஏ அதிகாரிகள், இந்த வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஸ்வப்னா சுரேஷ் திருச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு, நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், அவர் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை கருப்ப கவுண்டர் வீதி அருகில் உள்ள பவிழம் வீதியில் வசித்து வரும் நகை பட்டறை உரிமையாளர்

நந்தகோபால் என்பவருக்கு இந்த வழக்கில் தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரிகள், இன்று அவரது வீடு மற்றும் நகை பட்டறையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



டிஎஸ்பி சாகுல் அமீது தலைமையிலான நான்கு பேர் கொண்டஅதிகாரிகள் குழுவினர், இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், கேரளாவிலிருந்து நந்தகோபாலின்  நகை பட்டறைக்கு தங்கம் கை மாற்றப்பட்டதா? விற்கப்பட்டதா? அல்லது ஆபரணங்கள் செய்து மீண்டும் கேரளாவுக்கு அனுப்பப்பட்டதா? என்ற கோணங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

கோவை கருப்ப கவுண்டர் வீதியில் உள்ள நந்தகோபாலின் வீடு மேல் மாடியிலும், தரைத்தளத்தில் பட்டறை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது‌.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...