மேட்டுப்பாளையத்தில் சாலையின் குறுக்கே சென்ற காட்டு பன்றி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநர் உயிரிழப்பு

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது காட்டு பன்றி மோதி விபத்து ஏற்பட்டதில் ஓட்டுநர் உயிரிழப்பு.

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது காட்டு பன்றி மோதி விபத்து ஏற்பட்டதில் ஓட்டுநர் உயிரிழப்பு.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கக்கூடிய வெல்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் நாசர், வெற்றிலை வியாபாரம் செய்து வருகிறார். 

இவர் நேற்று, இரவு தனது இருசக்கர வாகனத்தில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு மேட்டுப்பாளையம், பத்ரகாளியம்மன் சாலை, சமயபுரம் பகுதியில் வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக காட்டுப்பன்றி ஒன்று சாலையை கடந்து உள்ளது. அதனால், தீடீரென வாகனத்தை நிறுத்த முடியாததால், இருசக்கர வாகனம் பன்றியின் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயம் ஏற்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார், அங்கு, அப்துல் நாசரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே, இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தற்போது, அப்துல் நாசர் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

விபத்து குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் முதல் கட்டமாக காட்டு பன்றியால் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு நஷ்டஈடாக, அப்துல் நாசர் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் சாலையில், வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், எனவும் குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும், என வனத்துறை தொடர்ந்து அறிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...