உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரள செல்ல பேருந்துகள் இயக்கப்படாது, என போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்.
கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து, கேரள செல்ல பேருந்துகள் இயக்கப்படாது, என போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்து கழகம் கோவை, சார்பாக கேரளா மாநிலம் கோழிக்கோடு, பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 30 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து இயக்கப்படும், என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் வெளிமாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.
இதனிடையே, கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாது, என போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
"கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தற்போது துவங்கப்படவில்லை. எனவே, உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா செல்ல பேருந்துகள் இயக்கப்படாது", என போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.