கோவையில் இருந்து நேற்று சென்னைக்கு புறப்பட்ட சிறப்பு ரயிலில் 9 பேர் மட்டுமே பயணம்..!

தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு எழுத செல்பவர்களுக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில் நேற்று இரவு 9 மணிக்கு, கோவை-சென்னை இடையே இயக்கப்பட்டது. இதில், கோவையில் இருந்து 9 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர், என தகவல் தெரிவிக்கின்றது

கோவை,: கோவையிலிருந்து பயணிகள் சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு எழுத செல்பவர்களுக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில், நேற்று இரவு 9 மணிக்குகோவை-சென்னை இடையே இயக்கப்பட்டது. இதில், கோவையில் இருந்து 9 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர், என தகவல் தெரிவிக்கின்றது.

அந்த ஒன்பது பயணிகளுக்கும், கோவை ரயில் நிலையத்தில் கேமராவுடன் இணைக்கப்பட்ட, தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

அதே போல், மறுமார்க்கமாக, சென்னையில் இருந்து கோவைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று இரவு 9 மணிக்கு இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து சென்னைக்கு 16 பெட்டிகள் கொண்டு அந்த ரயில் இயக்கப்பட்டது.

இது குறித்து, தென்னக ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவையில் இருந்து தேர்வு எழுத செல்வோர், அவர்களது பெற்றோர்கள் என 9 பேர் மட்டுமே பயணம் செய்தனர். அவர்களுக்கு உரிய காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், முககவசம் உள்ளிட்டவை அணிந்துள்ளனரா? எனவும் கண்காணிக்கப்பட்டனர்," என்றார்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...