கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தில் 7.2 டன் சரக்குகளை ஏற்றி புதிய சாதனை!

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமான சரக்கு வளாகம் மூலம் பயணிகள் விமானத்தில் 7.2 டன் சரக்குகளை ஏற்றி புதிய சாதனை படைத்துள்ளது.



கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமான சரக்கு வளாகம் மூலம் பயணிகள் விமானத்தில் 7.2 டன் சரக்குகளை ஏற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒருங்கிணைந்த விமான சரக்கு வளாகம் உள்நாட்டுத் துறை மற்றும் சர்வதேச துறையில் பல்வேறு இடங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், ஏர் சரக்கு வளாகத்தில் ஒரு பயணிகள் விமானத்தில் 7.2 டன் சரக்கு ஏற்றப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், "வழக்கமாக 3.5 டன் முதல் அதிகபட்சமாக 4 டன் சரக்குகள் மட்டுமே பயணிகள் விமானங்களில் ஏற்றப்படும்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை கோவையில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட்ட பயணிகள் விமானத்தை இண்டிகோ ஏர்லைன்ஸ் இயக்கியது. இந்த விமானம் இரவு 9:30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 12 மணியளவில் டெல்லியை அடைந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

இதனிடையே, இந்த விமானத்தில் காய்கறிகள், ஆட்டோபார்ட்ஸ், ஆடைகள் மற்றும் பல்வேறு தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக சரக்கு முன்பதிவு செய்யப்பட்டது. சரக்கு பணிகளை ஏற்றிய முடிவில், அந்த பயணிகள் விமானத்தில் 7.2 டன் சரக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது.

கோவை சர்வதேச விமான நிலைய சரக்கு வளாகத்தின் மூலம் அதிகபட்சமாக ஏற்றப்பட்ட எடை இதுவாகும். இதன் மூலம் பயணிகள் விமானத்தில் 7.2 டன் சரக்குகளை ஏற்றி கோவை விமான சரக்கு வளாகம் புதிய சாதனை படைத்துள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...