செப்.7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி: பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் வரவேற்பு
கோவை: தமிழகம் முழுவதும் செப்டம்பர் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி அளித்துள்ள, முதலமைச்சரின் அறிவிப்பு, பொது மக்கள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 முதல் மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்க அனுமதியளித்தை தொடர்ந்து, தற்போது செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பயணிகள் ரெயில் சேவைக்கும், மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கி தமிழக முதல்வர் பழனிசாமி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, பொது மக்கள் மற்றும் தொழில் துறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.கோவையிலிருந்து, திருப்பூர், நீலகிரி, ஈரோடு போன்ற மாவட்டங்களுக்குவேலைக்கு செல்பவர்கள், பேருந்து மற்றும் ரயில் சேவை இல்லாததால், பெரும் அவதிக்குள்ளாகினர்.
பொது போக்குவரத்து அனுமதி இல்லாததால், வேலைக்கு ஆட்கள் வருவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், உற்பத்தி பெரும் அளவில் பாதிப்பு அடைந்து மேலும் நஷ்டம் அடைந்து வருவதாக தொழில் துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், முதல்வரின் இந்த போக்குவரத்து தளர்வு குறித்த அறிவிப்பு மீண்டும் இயல்பு நிலையை உருவாக்க உறுதுணையாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.