கோவையில் 168 நாட்களுக்குப் பிறகு ப்ரோஜோன் வணிக வளாகம் இன்று மீண்டும் திறப்பு..!

கோவை: கோவையில் 168 நாட்களுக்குப் பிறகு ப்ரோஜோன் வணிக வளாகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் 168 நாட்களுக்குப் பிறகு ப்ரோஜோன் வணிக வளாகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 16ம் தேதி ப்ரோஜோன் வணிக வளாகம் மூடப்பட்டது.



இந்நிலையில், வணிக வளாகங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று அவ்வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 168 நாட்களுக்குப் பிறகு பொதுமக்களுக்கு வணிக வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.



வணிக வளாகத்திற்கு வரும் பொதுமக்கள் செல்போனில் கியூ.ஆர். கோடினை ஸ்கேன் செய்து விவரங்களை பதிவிட்ட பின்னர் உடல் வெப்ப நிலை பரிசோதித்து அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வணிக வளாகம் இயங்கி வருவதாகவும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் வணிக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவ்வணிக வளாகத்தின் இயக்குநர் தெரிவித்தார்.

அதேபோல, பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு வணிக வளாகம் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வாடிக்கையாளர் பாதுகாப்பை மையப்படுத்தி கடைகள் இயங்கி வருவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

168 நாட்களுக்குப் பிறகு வணிக வளாகம் திறக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...