கோவை: உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர், அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் பெய்து பிஏபி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள சோலையாறு, பரம்பிக்குளம் போன்ற அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருமூர்த்தி அணையில் 900 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், பி.ஏ.பி 2ம் மண்டலத்திற்கு செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, அதற்கு முன்னதாக உப்பாறு அணைக்கு, அரசூர் வழியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும், அத்திக்கடவு -அவினாசி திட்டம் போன்று உப்பாறு அணைக்கு, அரசூர் சட்டரிலிருந்து இருந்து புதை குழாய் மூலம் நீரை எடுத்து வந்து உப்பாறு அணையை நிரப்பினால் உபரிநீர் வீணாகமல் தடுக்கப்படுவதோடு, விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும், எனவும், இதனை மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வருக்கு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.